Connect with us

துல்கர் சல்மானின் காந்தா நாளை ரிலீஸ், ரிலீசுக்கு முன்பே பாக்ஸ் ஆபிஸ் புயல்!

Uncategorized

துல்கர் சல்மானின் காந்தா நாளை ரிலீஸ், ரிலீசுக்கு முன்பே பாக்ஸ் ஆபிஸ் புயல்!

நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள “காந்தா” படத்தை சுற்றியுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் First Look வெளியான தருணத்திலிருந்து ரசிகர்களிடம் பெரிய எக்சைட்ட்மெண்ட் உருவாகியது. “எப்போது திரையில் பார்க்கலாம்?” என்ற ஆவல் நேற்று நடந்த பிரிமியர் ஷோவுக்குப் பின் இன்னும் அதிகரித்துள்ளது. பிரிமியர் பார்த்தவர்கள் அனைவரும் “படம் செம்மையாக வந்திருக்கிறது!” என்று சமூக வலைத்தளங்களில் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காந்தா படத்தின் முன்பதிவு பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் இதுவரை முன்பதிவில் மட்டும் ரூ. 1.8 கோடி வசூல் செய்து ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பால் நிரம்பிய நிலையில், படம் நாளை எப்படி பெர்ஃபார்ம்பண்ணும் என்பதற்காக அனைவரும் காத்திருக்கின்றனர்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரகசிய டாஸ்க் மூலம் பிக் பாஸ் வீட்டை தலைகீழாக மாற்றிய சாண்ட்ரா!

More in Uncategorized

To Top