Connect with us

சர்ச்சியை தாண்டி வசூலில் சாதனை, Dude பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியீடு

dude

Cinema News

சர்ச்சியை தாண்டி வசூலில் சாதனை, Dude பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியீடு

Dude Collection Report: அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் தலைமையில் உருவான ‘Dude’ திரைப்படம், வெளியான முதல் சில நாட்களில் தான் ரசிகர்கள் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்று வருகிறது.

இப்படத்தில் மமிதா பைஜூ மற்றும் சரத்குமார் போன்ற அனுபவசாலியான நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியானபோது சில சர்ச்சைகளையும் சந்தித்தது; இருப்பினும், இளைஞர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்றது.

பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து உருவாக்கிய படங்கள் ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மற்றும் ‘Dude’ அனைத்தும் ரூ. 100 கோடி வசூல் சாதனை குவித்துள்ளன. இந்த வரிசையில், ‘Dude’ தனது முதல் 14 நாட்களில் உலகளாவிய வசூலில் ரூ. 111 கோடி சம்பாதித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு இருக்கும் என்பது இன்னும் காத்திருக்க வேண்டிய நிலை. இருப்பினும், தற்போது கிடைத்த புள்ளிவிவரங்கள் படத்தின் வரவேற்பும், வியாபார ரீதியான வெற்றியும் மிக சிறந்ததாக இருப்பதை காட்டுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜேசன் சஞ்சய் விமான நிலையத்தில் காட்டிய செயலால் ரசிகர்கள் பரபரப்பு!

More in Cinema News

To Top