Connect with us

என் பிறந்தநாளை கொண்டாட்ட வேண்டாம் – ரசிகர்கள் மற்றும் த.வெ.க நிர்வாகிகளுக்கு விஜய் வேண்டுகோள்..!!

Cinema News

என் பிறந்தநாளை கொண்டாட்ட வேண்டாம் – ரசிகர்கள் மற்றும் த.வெ.க நிர்வாகிகளுக்கு விஜய் வேண்டுகோள்..!!

தனது பிறந்தநாளை யாரும் கொண்டாடவேண்டும் ஏதேனும் கொண்டாட்டங்களை முடிவு செய்திருந்தால் உடனே நிறுத்த வேண்டும் என ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் உத்தரவிட்டுள்ளார்.

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் (22.06.2024) நாளை தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில் தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என விஜய் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுமட்டுமின்றி 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததுடன் அரசியல் தலைவர்கள் பலரும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்ளை நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

இதேபோல் நடிகர் விஜய்யும் கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் தனது கட்சி நிர்வாகிகளுக்கு விஜய், தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top