Connect with us

🔥 “சர்ச்சை வேண்டாம்… சவால்களை தான் சொன்னேன்!” – சிவகார்த்திகேயன் விளக்கம்

Cinema News

🔥 “சர்ச்சை வேண்டாம்… சவால்களை தான் சொன்னேன்!” – சிவகார்த்திகேயன் விளக்கம்

‘தாய் கிழவி’ பட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய “தடைகள்” குறித்த கருத்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதற்கு அவர் அளித்துள்ள விளக்கம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், “யாருடைய பெயரையும் குறிப்பிடி சர்ச்சை கிளப்ப வேண்டும் என்ற எண்ணமே இல்லை” என்று தெளிவாக கூறியுள்ளார்.

தனது சினிமா பயணத்தில் சந்தித்த சவால்கள் மற்றும் கடந்து வந்த அனுபவங்களை மட்டும் பகிர்ந்ததாகவும், எந்த நபரையோ குழுவையோ குறை கூறும் நோக்கம் இல்லை என்றும் விளக்கமளித்தார். மேடையில் கூறிய வார்த்தைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், இனிமேல் இத்தகைய கருத்துகளை மிகவும் கவனமாக வெளிப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சமூக வலைதளங்களில் பரவிய சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 மாஸ் கூட்டணி மீண்டும் இணைவு… ‘புருஷன்’ படப்பிடிப்பு கோலாகலமாக தொடக்கம்!

More in Cinema News

To Top