Connect with us

திமுகவில் சலசலப்பு! ஆர்.எஸ். பாரதி அமைதியாய் இருக்க, வாஷ் அவுட் கிளம்புதா? விசிக–தவெக கவனிக்கட்டும்!

Politics

திமுகவில் சலசலப்பு! ஆர்.எஸ். பாரதி அமைதியாய் இருக்க, வாஷ் அவுட் கிளம்புதா? விசிக–தவெக கவனிக்கட்டும்!

சென்னை: கரூரில் கூட்டம் நடத்த மாநில அரசிடம் அனுமதி கேட்டுவிட்டு, விசாரணையை மட்டும் டெல்லியில் நடத்த வேண்டும் எனும் தவெகின் நடைமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார் மூத்த அரசியல் விமர்சகர் அய்யநாதன். “பயத்தில்தான் இத்தனை வழக்குகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்,” என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ் நிறம் சேனலுக்கு அளித்த பேட்டியில், “விஜய் ஒரு அர்ப்பணிப்பு அரசியல்வாதி அல்ல; வாரம் தோறும் மாவட்டம் மாற்றி மேட்னி–ஈவினிங் ஷோ நடத்தும் அரசியல்தான் அவர் செய்கிறார்,” என்று விமர்சித்தார்.

அய்யநாதன் மேலும் கூறியதாவது: “நாமக்கல், கரூர், நாகப்பட்டினம், திருவாரூர் என ஒவ்வொரு இடத்திலும் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துகிறார் விஜய். ஆனால் இதெல்லாம் மக்களை ஏமாற்றும் நாடகம் மாதிரி தான். விஜய் முதலமைச்சராக வருவார் என பேசுவதும் வீண். பவன்குமார் ஆட்சிக்கு வந்தார் என்பதற்காக நாமும் வரவேண்டும் என்கிற ஆசையில்தான் தொண்டர்கள் உள்ளனர். அதனால்தான் கூட்டணிக்காக பரிதவித்து ஓடுகிறார்கள்; காணாமல் போவது, டெல்லிக்கு போவது இதன் வெளிப்பாடே,” என்றார்.

தவெக பற்றிப் பேசும் போது அவர், “விஜய் கட்சி ஒரு பேனர் பார்ட்டி மட்டுமே. அமைப்பே இல்லாத கட்சி அது. அமைப்பு செயலாளரே இல்லாமல் கட்சி எப்படி இயங்கும்? திமுக ஆபீஸில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆணி அடித்தது போல அங்கேயே உட்கார்ந்திருப்பார்; ஏனெனில் ஒவ்வொரு விஷயத்தையும் கட்சி தலைமைக்கு ரிப்போர்ட் செய்வார். அதுபோல ஒரு அமைப்பு ஒழுங்கு இல்லாமல், விஜய் கட்சி நடக்காது,” என்று கூறினார்.

மேலும், “விஜய் ஒரு சினிமா ஷூட்டிங் மாதிரி கரூரில் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். ஜனநாயகன் படத்துக்காக மக்கள் கூட்டம் சேகரிக்கப்பட்டது போலவே அது இருந்தது. இல்லாவிட்டால் அந்த அளவுக்கு மக்கள் வரமாட்டார்கள். இதை ஸ்டைட் விசாரணையில் தெரிந்து விடுவார்கள். அதனால்தான் மாநில போலீஸை தவிர்க்கிறார்கள். தவெக, அதிமுக, பாஜக மூன்றும் சேர்ந்தால் திமுக வாஷ் அவுட் ஆகும் என்கிறார்கள்; ஆனால் உண்மையில் இவர்கள் சேர்ந்தால் மக்களே இவர்களை விட்டு ஓடிவிடுவார்கள்,” என்று அய்யநாதன் தனது பேட்டியில் கூர்ந்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சென்னை — இந்திய வளர்ச்சியை முந்திய தமிழ்நாடு! ‘பவர் ஹவுஸ்’ என பெருமைபடும் முதல்வர் ஸ்டாலின்

More in Politics

To Top