Connect with us

“விக்னேஷ் சிவன் இயக்கும் ‘LIC’ படத்தின் Shooting தொடங்கியது! Viral Pic!”

Cinema News

“விக்னேஷ் சிவன் இயக்கும் ‘LIC’ படத்தின் Shooting தொடங்கியது! Viral Pic!”

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ’LIC’ அதாவது ’லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பை தொடங்கி விட்டதாகவும் இனிமேல் ஓய்வே இல்லாமல் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறும் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தொடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படப்பிடிப்பு குறித்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் ’LIC’ என்ற டைட்டிலை பயன்படுத்தக்கூடாது என்று ஏற்கனவே LIC நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இருப்பினும் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் டைட்டிலை மாற்றாமல் LIC என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top