Connect with us

“ரஜினியை இயக்குவது குழப்பத்தையும் கொடுத்தது..! இயக்குனர் நெல்சன் சொன்ன விஷயம்! என்ன இப்படி சொல்றாரு..!”

Cinema News

“ரஜினியை இயக்குவது குழப்பத்தையும் கொடுத்தது..! இயக்குனர் நெல்சன் சொன்ன விஷயம்! என்ன இப்படி சொல்றாரு..!”

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக நடித்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தார் ரஜினி. படத்தின் துவக்கத்தில் சாதுவாக காட்டப்படும் ரஜினி, தன்னுடைய மகன் கொல்லப்பட்டதாக நினைத்து அதிரடியாக மாறுவதாக இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்தது. ஒருகட்டத்தில் தன்னுடைய மகனே குற்றவாளியாக நிற்கும்நிலையில் ரஜினியின் நிலைப்பாட்டையும் இந்தப் படம் எடுத்துக் காட்டியது.

F5K8IWibUAAt3a3 (2)

இந்தப் படம் சர்வதேச அளவில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து நல்ல விமர்சனங்களையும் அதிகமான வசூலையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை ரஜினி, நெல்சன், அனிருத்துடன் கொண்டாடி மகிழ்ந்தது சன் பிக்சர்ஸ். மேலும் படத்தில் வேலை செய்த அனைவரும் கௌரவப்படுத்தப்பட்டனர். ரஜினி மற்றும் நெல்சனுக்கு விலையுயர்ந்த கார் மட்டுமில்லாமல் செக்கும் கொடுக்கப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத்திற்கு விலையுயர்ந்த கார் பரிசளிக்கப்பட்டது.

படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இந்த ஆண்டின் வெற்றிப்பட வரிசையில் முன்னணி இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தை டைரக்ட் செய்தபோது தனக்கு மிகப்பெரிய சவாலும் குழப்பமும் ஏற்பட்டதாக இயக்குநர் நெல்சன் தனது சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ரஜினியிசம்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பாக இருந்ததாகவும் இதையொட்டியே தான் கதைக்களத்தை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் படத்தை பார்க்க அதிகமான ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து தான் படத்தை உருவாக்கியதாகவும் நெல்சன் குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் ரசிகர்கள் குறித்து தெரிந்து வைத்திருந்ததாகவும் கடந்த 50 ஆண்டுகளாக அவரின் படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் தான் அறிந்திருந்ததாகவும் நெல்சன் கூறியுள்ளார். அதனால் அவரது ரசிகர்களை திருப்தி படுத்த முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top