Connect with us

கவின் படத்தை தயாரிக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் – வைரலாகும் ப்ரோமோ வீடியோ

Cinema News

கவின் படத்தை தயாரிக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் – வைரலாகும் ப்ரோமோ வீடியோ

இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ வெளியாகி செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் நெல்சன் , அதேசமயம் இந்த பக்கம் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின்.

இந்த இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கமாக இருக்கும் நிலையில் இவர்கள் எப்போது இணைந்து படம் பண்ண போகிறார்கள் என்ற கேள்வி நீண்ட நாட்களாக கேட்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் கவின் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இயக்குநர் நெல்சன் நடிகர் கவினை வைத்து தனது முதல் படத்தை தயாரிக்க உள்ளார்.

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள இயக்குநர் நெல்சனின் முதல் படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்க இந்த படத்திற்கு BLOODY BEGGER எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சிவபாலன் முத்துக்குமார் இயக்கும் இப்படத்திற்கு, ‘டாடா’ படத்திற்கு இசையமைத்த ஜென் மார்டின் இசையமைக்கிறார்.

இதுகுறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட அந்த வீடியோவும் தற்போது செம வைரலாகி வருகிறது.

இந்த கம்போ குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள் நண்பர்களே..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நிலம் வழியாக அல்ல, வானில் வழியாக பறக்கப் போகும் TVK தலைவர் விஜய்

More in Cinema News

To Top