Connect with us

கோலிவுட்டும் இல்ல பாலிவுட்டும் இல்ல இனி ஹாலிவுட்தான் தான் – இயக்குநர் அட்லீ சொன்ன டக்கர் தகவல்

Cinema News

கோலிவுட்டும் இல்ல பாலிவுட்டும் இல்ல இனி ஹாலிவுட்தான் தான் – இயக்குநர் அட்லீ சொன்ன டக்கர் தகவல்

கோலிவுட்டை பார்த்துவிட்டேன் பாலிவுட்டையும் பார்த்துவிட்டேன் இனி ஹாலிவுட்டில் என்னை பார்க்க தயாராகுங்கள் என்ற பாணியில் தனது ஹாலிவுட் என்ட்ரி குறித்து இயக்குநர் அட்லீ பேசியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அட்லீ கூறியதாவது :

என்னுடைய முதல் நாள் ஷூட்டிங் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து, ரஜினியைப் பார்த்திருக்கிறேன். விஜய்யை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். இப்போது ஷாருக்கான் அவர்களை இயக்கி உள்ளேன் .

பாலிவுட்டை அடைவதற்கு எனக்கு 8 வருடங்கள் தேவைப்பட்டன. அடுத்த 3 வருடங்களில் ஹாலிவுட்டில் இருந்து மிகப்பெரிய ஒரு அறிவிப்பை நீங்கள் காண முடியும் என இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அட்லீ இயக்கும் படங்களின் மேல் பல விமர்சனங்கள் எழுந்தாலும் படமோ சூப்பர் டூப்பர் அடிக்கிறது. வசூலிலும் பட்டயகிளப்புகிறது. அவர் சொன்னது போல் அற்புதங்கள் பல அவரது வாழ்வில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதில் அவர் ஹாலிவுட்டில் என்னமாதிரியான கதையினை படமாக எடுக்கப்போகிறார் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "சுறா" வசனம் வைரல் – TVK தலைவர் விஜய்யை குறிவைக்கும் ட்ரோல் அலையால் அரசியல் சூடு!

More in Cinema News

To Top