Connect with us

தனுஷின் 54வது படம், ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட வைரல் அப்டேட்!

Cinema News

தனுஷின் 54வது படம், ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட வைரல் அப்டேட்!

Dhaush: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தனுஷ், கடந்த சில வருடங்களில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது “குபேரா” திரைப்படம் வெளியாகியிருந்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை படம் பெறவில்லை. அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் “இட்லி கடை” திரைப்படம் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தனுஷின் அடுத்த படமாக இருந்தது போர் தொழில் திரைப்படம். தற்போது திரையுலக ரசிகர்கள் எதிர்பார்த்த D54 படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்க உள்ளார்.D54 படம் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிறது. கதாநாயகியாக இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார், மேலும் இவர் சமீபத்தில் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவு, படத்தின் மீதான அவரது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

“பிளாக்பஸ்டர் படம், எழுத்து மற்றும் ஆடியோ அனைத்து கூறுகளும் மிக உயர்ந்த தரத்தில் வருகிறது. சமீப காலங்களில் எனது படைப்புகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குநர் மற்றும் சைலண்ட் கில்லர்.”

இந்தப் பதிவு வெளியானதும் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் D54 படத்துக்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாகியுள்ளது. தனுஷ், விக்னேஷ் ராஜா மற்றும் ஜி.வி. பிரகாஷ் குழுவின் கூட்டணி படத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அழகான ஹீரோயின்களுக்கு ஏன் கருப்பு மேக்கப், பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்

More in Cinema News

To Top