Connect with us

திருச்சியில் 45 நாள் “திருடா திருடி” ஷூட்டிங் அனுபவங்களை பகிர்ந்த தனுஷ்

Cinema News

திருச்சியில் 45 நாள் “திருடா திருடி” ஷூட்டிங் அனுபவங்களை பகிர்ந்த தனுஷ்

தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில், ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோவையில், ப்ரீ-ரிலீஸ் நிகழ்வை மதுரையில் நடத்திய படக்குழு, திருச்சியிலும் ஒரு ப்ரீ-ரிலீஸ் நிகழ்வை நேற்று மாலை நடத்தியது.

இந்த நிகழ்வில் பேசிய தனுஷ், திருச்சி குறித்து தனது நினைவுகளை பகிர்ந்தார்:
“திருச்சி என்றாலே எனக்கு திருடா திருடி நினைவுக்கு வரும். நான் முதன் முதலாக திருடா திருடி படப்பிடிப்புக்காக இங்கு வந்தேன். அங்கு 45 நாட்கள் இருந்தேன். அப்போது காதல் கொண்டேன் படப்பிடிப்பு இன்னும் 5 நாட்கள் பாக்கி இருந்தது. அதே நேரம் திருடா திருடி ஷூட்டும் துவங்கிவிட்டது. அப்பொழுது ஒரு படம் பூஜை போட்டு ஷூட் நடக்காமல் இருந்தால் அபசகுனமாக நினைப்பார்கள். காதல் கொண்டேன் 5 நாட்கள் ஷூட் செய்தால்தான் ரிலீஸ் ஆகும் நிலை. அதே நேரத்தில் திருடா திருடி ஷூட்டையும் நிறுத்த முடியவில்லை.

காதல் கொண்டேன் ஷூட் மாலையில் நடந்து, காலை 4 மணிக்கு முடிந்ததும் அங்கிருந்து காரில் திருடா திருடி ஷூட் வந்தேன். அங்கு 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை ஷூட். மறுபடியும் சென்னைக்கு சென்று காதல் கொண்டேன் ஷூட். இப்படியே மாறி மாறி 4 நாட்கள் நடந்து சென்றது. அப்படி அலைந்து ஷூட் செய்ததால் தான் இங்கு நிற்க முடிகிறது. என்னை பார்க்க நீங்கள் அனைவரும் இங்கே இருக்கிறீர்கள்.”

தனுஷ் மேலும் தெரிவித்தார்:
“இட்லி கடை ஒரு சாதாரண, எளிமையான படம். ஊரில் இருந்து கிளம்பி வேலை தேடி வெளியூர் சென்றவர்கள், வெளிநாட்டுக்கு செல்லும் பலர் இந்தப் படத்தை மனதிற்கு நெருக்கமான படமாக உணருவார்கள் என நான் நினைக்கிறேன். தொடர்ந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றி.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு வெளியானது! ரசிகர்கள் ஆச்சரியம்

More in Cinema News

To Top