Connect with us

புஸ்ஸி ஆனந்தை விமர்சித்த தாடி பாலாஜி—தவெகவில் மீண்டும் இணைவாரா?

Cinema News

புஸ்ஸி ஆனந்தை விமர்சித்த தாடி பாலாஜி—தவெகவில் மீண்டும் இணைவாரா?

2024ஆம் ஆண்டு விஜய் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியான ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஆக அறிவித்த சில வாரங்களிலேயே தாடி பாலாஜி விஜய்யை சந்தித்து கட்சியில் இணைந்தார். அதன் பின்னரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு செயல்பட்டு வந்தார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டிலும் பங்கேற்றார். ஆனால் பின்னர் ஏற்பட்ட சில மனக்கசப்புகள் காரணமாக ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில், விஜய் தனது கட்சியில் தமக்கு ஒரு பொறுப்பு வழங்குவார் என்ற நம்பிக்கையை தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். விஜய்யின் ஆரம்பக்கால படங்களில் நண்பனாக நடித்தவர்களில் ஒருவராகவும், அவரது நெருங்கிய நண்பராகவும் தாடி பாலாஜி இருந்தார். விஜய்யின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில் மார்பில் பச்சை குத்தும் வரை சென்றவர் தாடி பாலாஜிதான்.

இவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்தாலும், கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படாமல், பல நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் முன்பு கூறியிருந்தார். ஆதவ் அர்ஜுனா கட்சியில் இணைந்தபோது, அதனை ஒட்டி ஒரு மீமும் பகிர்ந்திருந்தார்.

இதற்கிடையில், புஸ்ஸி ஆனந்தை குறிவைத்து தாடி பாலாஜி தெரிவித்த கருத்துகள் கவனத்தை ஈர்த்தன. “பல ஆண்டுகளாக விஜயுடன் இருப்பதால், என்னைத் தாண்டி தான் விஜயைச் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறார். தலைவர் விஜயை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புகளை அவர்கள் மறுக்கிறார்கள். தலைவரைச் சந்தித்து பேசினால்தான் கட்சியின் நிலையும் மக்களின் தேவைகளும் விளங்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.

கரூரில் நடந்த துயரச் சம்பவத்தின் போதும், விஜய் சமயோசிதமாகச் செயல்பட்டிருப்பார்; ஆனால் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா சரியான தகவலை வழங்கவில்லை எனவும் தாடி பாலாஜி முன்வைத்திருந்தார்.

இப்போது தவெகவில் மீண்டும் இணைவது குறித்து, “நான் கட்சியில் சேர்வது கடவுளுக்கே தெரியும். தலைவர் விஜய் ஒருநாள் எனக்கான வாய்ப்பை கண்டிப்பாக வழங்குவார்” என்ற நம்பிக்கையுடன் கூறியுள்ளார். அவரது இந்த புதிய கருத்து மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Kaithi 2 Update: தொடக்க தேதி இன்னும் ரகசியம்… ரசிகர்கள் குழப்பம்!”

More in Cinema News

To Top