Connect with us

நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்..!!

Cinema News

நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்..!!

கூட்டத்தில் பேச கூடாததை பேசி போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு தெலுங்கு மக்கள் குறித்து அவதூறான கருத்துக்களையும் பேசினார்.

நடிகை கஸ்தூரியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரியை போலீசார் கைது செய்யமுயன்றபோது அவர் தப்பித்து தலைமறைவானார். இதையடுத்து ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கஸ்தூரியை கைது செய்த போலீசாரை அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தனது மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை அவரை நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறி நடிகை கஸ்தூரி ஜாமின் மனு அளித்திருந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாலிவுட்டில் மீண்டும் நயன்தாரா – சல்மான் கானுடன் புதிய படம்?

More in Cinema News

To Top