Connect with us

“Captain Miller, Ayalaan படங்களின் Box Office Report! பொங்கல் வின்னர் யார்?!”

Cinema News

“Captain Miller, Ayalaan படங்களின் Box Office Report! பொங்கல் வின்னர் யார்?!”

தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள் ஒன்றாக வெளியானதால் பாக்ஸ் ஆபிஸ் ரேஸ் செம்ம சூடு பிடித்துள்ளது. விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். ஆனாலும், அவரது ஆரம்ப கால சினிமா கேரியரில் தனுஷ் அதிகமாக உதவி செய்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தில் சிவகார்த்திகேயனை காமெடி ரோலில் நடிக்க வைத்து அழகுப் பார்த்தார். பின்னர் சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல் படத்தை தனுஷே சொந்தமாகவும் தயாரித்தார். அப்போதெல்லாம் தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோரது கேங் அடிக்கடி சந்தித்துக்கொள்வதை பார்க்க முடிந்தது.

ஆனால், திடீரென இக்கூட்டணியில் விரிசல் விழுந்ததை அடுத்து, தனுஷ் – சிவகார்த்திகேயன் இருவரும் சுத்தமாக பேசிக்கொள்வதே கிடையாது. இப்படியான சூழலில் தான் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படங்கள் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகியுள்ளன. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ், சிவராஜ்குமார், ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பீரியட் ஜானரில் பக்கா ஆக்‌ஷன் மூவியாக உருவாகியுள்ள கேப்டன் மில்லருக்கு முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்தது. அதன்படி முதல் நாள் 8.80 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இதனுடன் ஒப்பீடு செய்கையில் சிவகார்த்திகேயனின் அயலான் 3.30 கோடி ரூபாய் மட்டுமே கலெக்‌ஷன் செய்திருந்தது. இதனால் கேப்டன் மில்லர் தான் பொங்கல் வின்னர் என தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். ஆனால் இரண்டாவது நாளில் 7.45 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

முதல் நாளை விட இரண்டாவது நாளில் கேப்டன் மில்லர் வசூல் குறைந்த நிலையில், அயலான் இரண்டாவது நாளில் 4.35 கோடி கலெக்‌ஷன் செய்து பாக்ஸ் ஆபிஸில் முன்னேறியது. மூன்றாவது நாளில் கேப்டன் மில்லர் வசூல் இன்னும் குறைந்து 7.25 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம். அதேநேரம் அயலான் மூன்றாவது நாள் வசூல் மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, இந்தப் படம் மூன்றாவது நாளில் 5.50 கோடி கலெக்‌ஷன் செய்துள்ளது.

ஒட்டுமொத்தமாக கேப்டன் மில்லர் 3 தினங்களில் 23.75 கோடியும், அயலான் 13 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளன. ஆனால், நாளுக்கு நாள் கேப்டன் மில்லரை விட அயலான் படத்தின் வசூல் அதிகரித்துக்கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொங்கல் ரியல் வின்னர் அயலான் தான் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேநேரம் அயலான், கேப்டன் மில்லர் படக்குழுவினர் இதுவரை அபிஸியல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் குறித்து அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

See also  12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவச்செல்வங்களே விரைவில் சந்திப்போம் - விஜய்யின் அறிவிப்பால் உற்சாகத்தில் மாணவர்கள்..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top