Connect with us

“இரண்டு படம் நடிச்சாலும், ‘பைசன்’ தான் என் முதல் படம்” – துருவ்

Cinema News

“இரண்டு படம் நடிச்சாலும், ‘பைசன்’ தான் என் முதல் படம்” – துருவ்

மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி ரிலீஸாக திரையரங்கிற்கு வருகிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா. மாரி செல்வராஜுடன் புதிய கூட்டணி போல இணைந்து நிவாஸ் இசையமைத்த பாடல்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.

நேற்று சென்னையில் படத்தின் புரோமோஷன் நிகழ்வு நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், துருவ் விக்ரம் பேசுகையில், “இதுவரை நான் இரண்டு படம் நடித்திருக்கிறேன். இரண்டு படங்களும் நீங்கள் கவனிக்கவில்லை என்றாலும் பரவால்ல, நோ ப்ராப்ளம். இந்த படம் நீங்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது என்னுடைய முதல் படம் போலவே நான் பார்த்து இருக்கிறேன். படத்துக்காக நான் 100% உழைத்துள்ளேன். தியேட்டரில் பார்த்தபோது அது தெரியும்.

ஆனா படத்தை நான் மட்டுமல்ல, இயக்குனர் மாரி செல்வராஜ் மிகவும் கடுமையாக உழைத்து தயாரித்துள்ளார். நான் இப்போ ஒரு நடிகர் இல்ல, ஒரு கபடி பிளேயர் மாதிரி இந்த படத்துக்காக கபடி கற்றுக் கொண்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.

ரஜிஷா விஜயன் கூறுகையில், “மாரி சார் எனக்கு இரண்டாவது பயணம். தமிழில் என்னை அறிமுகப்படுத்தியது அவர்தான். கர்ணன் படத்தில் நடித்த பிறகு இப்போ ‘பைசன்’ படத்தில் இணைந்துள்ளேன். துருவ், அனுபமா போன்ற சிறந்த நடிகர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி.

படத்திற்குப் பிறகு நல்ல நண்பர்களாக அவர்கள் கிடைத்துள்ளனர். இந்த படத்தின் கதையை மாரி சார் மிகவும் அன்போடு உருவாக்கியுள்ளார். ஒரு நடிகைக்கு அதிக மகிழ்ச்சி இரண்டு விஷயங்களில் வரும்: ஒன்று – ரசிகர்களின் அன்பு, இரண்டாவது – இயக்குனரின் நம்பிக்கை. ‘நான் உங்களை நம்புகிறேன்’ என்று மாரி சார் என்னை மீண்டும் உற்சாகப்படுத்தினார். எனது கதாபாத்திரம் முக்கியமானது, ஆனால் விவரிக்க முடியாது,” என்று ரஜிஷா மேலும் கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாதம்பட்டி ரங்கராஜால் பெண்கள் பலர் பாதிப்பு –ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி தகவல்

More in Cinema News

To Top