Connect with us

பிக்பாஸ் சீசன் 9– வைல்ட் கார்டாக வரப் போவது யார் தெரியுமா?

bb

Cinema News

பிக்பாஸ் சீசன் 9– வைல்ட் கார்டாக வரப் போவது யார் தெரியுமா?

Bigg Boss 9 Tamil: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் எப்போதுமே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிய முகங்களும், புதிய விதமான கான்செப்ட்களும் கலந்து வரும் இந்த நிகழ்ச்சி, இம்முறை இன்னும் அதிக சர்ச்சைகளுடன் வருகிறது.

அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 9, ஆரம்பத்தில் மொத்தம் 20 போட்டியாளர்களுடன் தொடங்கியது. ஆனால் சில வாரங்களிலேயே நந்தினி, பிரவீன் காந்தி, அப்சாரா, அதிரை ஆகியோர் வெளியேறியுள்ளனர். இதுவரை நிகழ்ச்சியில் சண்டை, கருத்து வேறுபாடுகள், கூட்டணி, துரோகம் என எல்லாம் ரசிகர்களுக்கு பரபரப்பை கொடுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே “வைல்ட் கார்டு என்ட்ரி யார்?” என்ற கேள்வி ரசிகர்களிடையே சூடுபிடித்தது. முதலில் சின்னத்திரை பிரபல ஜோடிகள் பிரஜன் மற்றும் சான்ட்ரா ஆகியோர் வைல்ட் கார்டாக பிக்பாஸில் நுழையலாம் என்ற வதந்தி பரவியது. ஆனால் தற்போது உறுதியான தகவலாக ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, பாக்கியலட்சுமி என்ற பிரபல தொடரின் மூலம் மக்களின் இதயத்தில் இடம்பிடித்த நடிகை திவ்யா கணேஷ் தான் இந்த முறை வைல்ட் கார்டு என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையவிருக்கிறார்!

திவ்யா கணேஷ் தன்னுடைய சமூக வலைதளங்களில் இதுகுறித்து சுட்டிக்காட்டியுள்ளார் என்றும், ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அவரின் நுழைவால் வீட்டிற்குள் புதிய மாற்றங்கள், புதிய சண்டைகள், புதிய கூட்டணிகள் உருவாகும் என்பது உறுதி!

ரசிகர்கள் சொல்லும் வார்த்தைகளில் – “திவ்யா கணேஷ் வந்தா வீட்டிலே கலக்கம்தான்!அப்படியானால், பிக்பாஸ் சீசன் 9 இப்போ இன்னும் சூடாகப் போகுது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷின் 54வது படம், ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட வைரல் அப்டேட்!

More in Cinema News

To Top