Connect with us

எவிக்‌ஷனால் மனம் நொந்த பிக்பாஸ் பிரவீன்! அழுது கையெல்லாம் நடுங்குது

Bigboss Season 9

எவிக்‌ஷனால் மனம் நொந்த பிக்பாஸ் பிரவீன்! அழுது கையெல்லாம் நடுங்குது

Bigg boss 9 Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஐந்து வாரங்களை வெற்றிகரமாக கடந்து, தற்போது ஆறாவது வாரம் தொடங்கியுள்ளது. 5வது வார இறுதியில் நடந்த டபுள் எவிக்‌ஷன் ரசிகர்களையும் போட்டியாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில் துஷார் மற்றும் பிரவீன் ராஜ் ஆகியோர் தொடர்ந்து இரண்டு நாளில் வெளியேற்றப்பட்டனர்.

வெளியேற்றப்பட்ட பிரவீன் தனது எவிக்‌ஷனைப் பற்றி வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் எப்போதும் நேர்மையாகவும் ஆர்வத்துடனும் விளையாடி வந்தவர் பிரவீன். அவரது டாஸ்க்குகள், நடத்தை, மனப்பான்மை ஆகிய அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. “யாருக்காக வீட்டில் இருக்கிறார்கள்?” என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியபோதும், பிரவீன் மீது அத்தகைய குற்றச்சாட்டுகள் எதுவும் எழவில்லை.

ஆனால் அவரின் எவிக்‌ஷனைப் பலர் “நியாயமற்றது” எனக் கூறி வருகிறார்கள். சிலர், “இந்த வாரம் துஷார் மற்றும் ரம்யாவே வெளியேற வேண்டியிருந்தது; ஆனால் பிக் பாஸ் குழு எதோ குளறுபடியாக முடிவு செய்துள்ளது” என்றும் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரவீன் தனது உணர்ச்சிமிக்க வீடியோவில் கூறியதாவது:

“எவிக்‌ஷன் பார்த்தவுடன் மனம் உடைந்து விட்டது. அழுது, கைகள் நடுங்கியதையும் உணர்ந்தேன். நான் தவறு செய்தேனோ, சரியாக விளையாடவில்லையோ, உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லையோ என நினைத்துக்கொண்டேன். இப்போது இந்த எவிக்‌ஷன் எனக்கு இருட்டாக உணரப்படுகிறது. ஆனால் உங்கள் அன்பு எனக்கு மீண்டும் ஒளி கொடுத்தது.

நான் வெளியேறியது நியாயமா இல்லையா என தெரியவில்லை. ஆனாலும் உங்கள் அன்பால் நான் மீண்டும் எழுந்திருக்கிறேன். இதை முடிவாக நினைத்தேன், ஆனால் இது ஒரு புதிய தொடக்கம் என்று தோன்றுகிறது. இன்னும் வலிக்கிறது… அந்த வலி எத்தனை நாட்கள் இருக்கும் என்று தெரியவில்லை.”

அவரின் இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் உணர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. பலர் “பிரவீனுக்கு இன்னும் ஓட்டு போட வேண்டியிருந்தது” என்று வருந்தி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  DNA பரிசோதனை குறித்து ரங்கராஜ் வாக்குமூலம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை

More in Bigboss Season 9

To Top