Connect with us

பிக்பாஸ் ஓவியா வெளியிட்ட சூப்பர் வீடியோ! குவியும் வாழ்த்துகள்!

Uncategorized

பிக்பாஸ் ஓவியா வெளியிட்ட சூப்பர் வீடியோ! குவியும் வாழ்த்துகள்!

2010ஆம் ஆண்டில் தமிழில் சூப்பர் ஹிட்டான “களவாணி” படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா.

முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு, மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர்கூடம், மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால், பட வாய்ப்புகள் குறைய, விஜய் டிவியில் “பிக்பாஸ்” முதல் சீசனில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்றார். அந்த நிகழ்ச்சியினால் ஓவியாவிற்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் உருவாகியது.

2019ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழில் ஒரு படமும் நடிக்காத ஓவியா, 2024ஆம் ஆண்டில் “பூமர் அங்கிள்” படத்தில் நடித்து, வெப் சீரியஸிலும் கலந்துகொண்டார். ஆனால், அவை பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில், புதிய படம் ஒன்றின் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளார் ஓவியா. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இந்த படம் ஓவியாவிற்கு நல்ல வெற்றியை கொடுக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

Continue Reading
Advertisement
You may also like...

More in Uncategorized

To Top