Bigg boss 9: விஜய் டிவியின் ரியல் ஷோவான பிக் பாஸ் தற்போது ஒன்பதாவது சீசனை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள் ஆனால் மற்ற சீசன்களை விட மோசமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது அதற்கு காரணம் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் நடவடிக்கைகளும் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
கமலிடம் இருக்கும் அனுபவமும் பக்குவமும் விஜய் சேதுபதியிடம் கொஞ்சம் கூட இல்லை. கமல் எப்பொழுதுமே போட்டியாளர்களை பேசவிட்டு அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை கொடுத்து விட்டு தவறு செய்தவர்களை கண்டிக்கும் விதத்தில் கண்டித்து திருத்த வேண்டும் என்று பல விஷயங்களை செய்து வந்தார். அதனாலே வார கடைசியை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.
ஆனால் அப்படியே தலைகீழாக இருக்கிறது விஜய் சேதுபதியின் பேச்சு. வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். அவர்களும் சக மனிதர்கள் தான் என்று நினைக்காமல் அவர்களை மட்டம் தட்டி பேசுவதும், பேசவிடாமல் அடக்குவதுமாகத்தான் விஜய் சேதுபதியின் செயல்கள் இருக்கிறது.
முக்கியமாக முதல் வார இறுதியில் போட்டியாளர்களை சந்தித்த பொழுது எல்லோரும் எழுந்து நின்று பெயரை சொல்லியதும் அதிரை உட்கார்ந்து கொண்டே பேசியது விஜய் சேதுபதி கண்டித்தது சரியாக படவில்லை. இப்படி விஜய் சேதுபதி மீது அடுக்கடுக்காக நெகட்டிவ் விமர்சனங்கள் போய்க் கொண்டே இருக்கிறது. அதே மாதிரி வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களும் ரியாலிட்டி ஷோ என்று மறந்துவிட்டு கொச்சையான சொற்களும், மோசமான விளையாட்டுகளையும் விளையாண்டு வருகிறார்கள்.
இந்த வாரம் இதை கண்டிக்கும் விதமாக விஜய் சேதுபதியின் செயல்கள் இருக்குமா என்று பார்வையாளர்களுக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் முதல் வாரத்தில் வெளிவந்த இயக்குனர் பிரவீன் காந்தி வெளியே வந்ததும் கொடுத்த பேட்டியில் அவர் சொன்னது என்னவென்றால் விஜய் சேதுபதி சினிமாவில் எனக்கு ஜூனியர். ஆனால் பிக் பாஸில் சீனியர் என்பதால் என்னால் அவரை எதிர்த்து பேச முடியவில்லை.
போட்டியாளர்களுக்கும் பேசுவதற்கு கொஞ்சம் வாய்ப்பு கொடுத்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். பிக்பாஸை தொகுத்து வழங்கும் ஒரு தொகுப்பாளர் மட்டும்தான் நீங்கள், பிக் பாஸை நீங்கள் இல்லை. அதை மனதில் வைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் பிக் பாஸ் வெற்றி நிகழ்ச்சியாக மாற வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இவ்வளவு விஷயங்கள் நடந்தும் விஜய் டிவி கண்டும் காணாமல் இருக்கிறது. ஏற்கனவே குக்கு வித்து கோமாளி சீரியல்கள் மூலம் டிஆர்பி ரேட்டிங் கம்மியாகிக் கொண்டு வருகிறது. தற்போது பிக் பாஸ் மூலமும் சரிவை சந்தித்து வருகிறது.