Connect with us

“பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற முயன்ற கூல் சுரேஷ்..! அழுது அடம்பிடித்த Video Viral!”

Cinema News

“பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற முயன்ற கூல் சுரேஷ்..! அழுது அடம்பிடித்த Video Viral!”

பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரம் கூட தாக்கு பிடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட கூல் சுரேஷ் பல வாரங்கள் நாமே ஆகாமலே தப்பித்து வந்த நிலையில், 70 நாட்களைக் கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் அவரை வெளியே அனுப்பி விட வேண்டும் என்கிற முயற்சியில் நடிகை விசித்ரா அவரை நாமினேட் செய்தார். தனது சோகக் கதையை சொல்லுங்க எனக் கேட்டுவிட்டு மறுநாள் அவருக்கே நாமினேஷன் வேட்டு வைத்து விட்டார்.

இதனால் கடுப்பான கூல் சுரேஷ், பிக் பாஸ் வீட்டில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலேயே இருக்க உனக்கு தகுதி இல்லை என விசித்ராவை விளாசி எடுத்துவிட்டார். அந்த வாக்குவாதத்தில் கூல் சுரேஷ் சரியான கணவர் இல்லை என்கிற வாதத்தை விசித்ரா வைத்த நிலையில் கடுப்பான கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற முதல் சீசனில் நாடோடிகள் பரணி செய்ததைப் போல பிக் பாஸ் வீட்டின் சுவர் ஏறி தப்பிக்க முயன்ற காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் வெளியேற முயற்சிப்பதை பார்த்த விஷ்ணு அங்கே ஓடி வந்து அவரை கீழே இறங்க சொன்னவுடன் கன்ஃபெஷன் ரூமுக்கு சென்ற சுரேஷ் கண்ணீர் விட்டுக் கதறி வீட்டுக்கு போக வேண்டும் என அழுகாச்சி டிராமா போட்டுள்ளார்.

இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் கூல் சுரேஷ் மற்றும் அவரை தொடர்ந்து குறைவான ஓட்டுக்களுடன் அனன்யா உள்ள நிலையில், கூல் சுரேஷுக்கு ஸ்கெட்ச் போட்டிருப்பதாகவே தெரிகிறது. கடந்த வாரம் எலிமினேஷன் ரத்தான நிலையில், இந்த வாரம் இருவரையும் வெளியேற்றுங்கள் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  49வது பிறந்தநாளில் ராகவா லாரன்ஸ்- சொத்து மதிப்பு, வரவிருக்கும் படங்கள்!

More in Cinema News

To Top