Connect with us

பிக்பாஸ் அமீர்–பாவனி: புதிய வீட்டுடன் புதிய வாழ்க்கை ஆரம்பம்!

ameer bavani

Cinema News

பிக்பாஸ் அமீர்–பாவனி: புதிய வீட்டுடன் புதிய வாழ்க்கை ஆரம்பம்!

Bigg Boss Ameer Bavani: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி பலரது வாழ்க்கையையும் மாற்றியமைத்தது. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை பாவனி ரெட்டி, தனது உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்திய தருணங்களால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பல வெற்றி தொடர்களில் நடித்த பாவனி, தனது முதல் கணவரை இழந்த துயரத்தை பிக்பாஸ் வீட்டில் பகிர்ந்தபோது, பலரும் அவருக்காக கண்நீர் விட்டு இருந்தனர்.

ஆனால் அந்த நிகழ்ச்சிதான் அவருக்கு வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாக மாறியது. பிக்பாஸில் இணைந்து போட்டியிட்ட அமீர் என்பவருடன் பாவனிக்கு ஏற்பட்ட நெருக்கம் பின்னர் காதலாக மாறி, இருவரும் தங்களது உறவை திறந்தவெளியில் அறிவித்தனர்.

நீண்ட நாட்களாக லிவிங் இன் ரிலேஷன்ஷிப் ஆக இருந்த இவர்கள், இறுதியாக 2025 தொடக்கத்தில் செம்ம பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்திற்கு பின், இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், தற்போது பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.

அவர் தனது கணவர் அமீருடன் சேர்ந்து புதிய வீடு கட்டிக் கொண்டிருப்பதாக புகைப்படங்களுடன் அறிவித்துள்ளார். அந்தப் படங்களில், இருவரும் பாரம்பரிய உடையில், புதிய வீட்டின் அடித்தள பூஜையில் கலந்துகொண்டுள்ள காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

பாவனியின் அந்த பதிவுக்கு ரசிகர்கள், உங்கள் புதிய வாழ்க்கைக்கும் புதிய வீட்டுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பிக்பாஸிலிருந்து இதுவரை வந்த உங்கள் பயணம் மிகவும் இன்ஸ்பிரேஷனல்!என்று பெருமளவில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

அமீர் – பாவனி ஜோடி தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான தம்பதிகளில் ஒருவராக மாறியுள்ளனர். இவர்களின் புதிய வீட்டின் அலங்காரம், வடிவமைப்பு போன்ற விஷயங்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உங்கள் குடும்பத்தின் ஒருவனாக இருப்பேன் – கண்ணீர் மல்க உறுதி அளித்த விஜய்

More in Cinema News

To Top