Bigg Boss 9: தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாக பிக் பாஸ், தற்போது புதிய விவாதங்களுக்கு இடமளிக்கிறது. 16+ வகைப்படுத்தலுடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, குடும்பங்களில் பெரியவர்கள் பார்க்கும் நேரத்தில், பிள்ளைகளும் இணைந்து பார்க்கும் சூழ்நிலையால் கவலை எழுந்துள்ளது. கடந்த சில சீசன்களாகவே, இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கம் சிறுவர்களுக்கு ஏற்றதல்ல என பெற்றோர்கள் மற்றும் சமூகவாதிகள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
முதல் சீசனிலேயே ஓவியா மற்றும் கொடுத்த முத்தம் மருத்துவ முத்தமாக மாற்றப்பட்டாலும் போட்டியாளர்களிடையே ஏற்பட்ட நெருக்கமான தருணங்கள் மற்றும் விவாதங்கள், குழந்தைகளின் பார்வைக்கு ஏற்றதல்ல என கூறப்பட்டது. அதுபோலவே தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9, அதிகளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
bigg boss (1)
சில போட்டியாளர்களின் செயல்கள் மற்றும் பேச்சுக்கள் பற்றி சமூக வலைதளங்களில் பார்வையாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, ஆபாசமான மொழிகள், தகுதியற்ற நடத்தைகள், மற்றும் கேட்பதற்கே ஏதுவாக இல்லாத சந்திப்புகள் நிகழ்ச்சியில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் விளைவாக, இந்த நிகழ்ச்சியை பிற்படுத்தும் செயல்களுக்கு தூண்டுகோலாக பார்க்க வேண்டாம் என்பதே பலரது கூற்று.
பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் கடந்த சீசன்களில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது சில பெண்கள் போட்டியாளர்களே நெறிமுறைகளை மீறி நடந்துகொள்வதாகவும் சமூகத்தில் ஓர் எதிர்மறை பார்வை உருவாகியுள்ளது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசனில் நிகழும் விஷயங்களை வைத்து, “இதை அவரது குடும்பத்தினர், குறிப்பாக குழந்தைகள் பார்ப்பதற்குத் தயாரா?” என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் விரிவாக பரவி வருகிறது. இதேபோல இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படும் நிகழ்வுகளை ஒப்பிட்டு, தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியும் அதேபோலச் செல்வதாக பலர் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த வகையான நிகழ்ச்சிகள் குடும்ப நிகழ்ச்சிகளா, தனிப்பட்ட சுய விருப்பத்துடன் மட்டுமே பார்த்திட வேண்டியவையா என்பதைக் குறித்து விவாதங்கள் கிளம்பியுள்ளன. மேலும், குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் அளவுக்கு சில காட்சிகள் அமைந்துள்ளனவா என்பதைப் பொது மக்கள், கல்வியாளர்கள், மற்றும் பெற்றோர்கள் சுயமாய்த் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….