Connect with us

பாகுபலி தி எபிக் ரீ-ரிலீஸ் – மீண்டும் பட்டையை கிளப்பும் வசூல் வேட்டை!

bhahubali

Cinema News

பாகுபலி தி எபிக் ரீ-ரிலீஸ் – மீண்டும் பட்டையை கிளப்பும் வசூல் வேட்டை!

Bhahubali Re-release: இந்திய சினிமாவின் வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த படங்களில் ஒன்றாக பாகுபலி தொடர் எப்போதும் குறிப்பிடப்படும். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் நடித்த இந்த மாபெரும் படத்தொடர், இந்திய சினிமாவின் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்தியது.

2015ஆம் ஆண்டு வெளிவந்த பாகுபலி அப்போது எதிர்பாராத அளவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் முடிவில் எழுந்த பிரபலமான கேள்வி — “கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?” — ரசிகர்களை பல மாதங்கள் பதட்டத்தில் வைத்தது.

அதற்கான விடை 2017ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாகுபலி 2: தி கன்குளூஷன்’ மூலம் கிடைத்தது. இந்த இரண்டாம் பாகம் அப்போது இந்திய சினிமா வரலாற்றில் மிக உயர்ந்த வசூல் சாதனையைப் படைத்தது — உலகளவில் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி தி எபிக் – 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்கில்!

பாகுபலி தொடர் வெளியானது இதுவரை 10 ஆண்டுகளாகும். இதை நினைவுகூரும் வகையில், இரண்டு பாகங்களையும் இணைத்து ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் சிறப்பாக ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். நவீன சவுண்ட் டெக்னாலஜி மற்றும் மேம்பட்ட திரை வடிவமைப்புடன் இந்த ரீமாஸ்டர்ட் பதிப்பு ரசிகர்களுக்கு மீண்டும் அந்த மாபெரும் அனுபவத்தை வழங்குகிறது.

கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அனைத்து மொழி மையங்களிலும், குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களிலும், வட இந்திய நகரங்களிலும் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் அதிரடி காட்டி வருகிறது.

வசூல் சாதனை

மூன்று நாட்களில் மட்டுமே, ‘பாகுபலி தி எபிக்’ உலகளவில் ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் வெளியான படத்துக்கு இது ஒரு மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சர்ச்சியை தாண்டி வசூலில் சாதனை, Dude பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியீடு

More in Cinema News

To Top