Connect with us

ஆர்யன், ஆண் பாவம் பொல்லாதது… இந்த வார OTT-யில் என்ன வந்திருக்குது?

Cinema News

ஆர்யன், ஆண் பாவம் பொல்லாதது… இந்த வார OTT-யில் என்ன வந்திருக்குது?

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் புதிய படங்களும் வெப் சீரிஸ்களும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. திரையரங்குகளைப் போலவே ஓடிடி தளங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பல்வேறு மொழிப் படங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த படங்கள், தொடர்கள் எந்த ஓடிடி தளங்களில் வெளியாகின்றன என்பதைக் பார்ப்போம்.

முதலில், நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘ஆர்யன்’. பிரவீன் இயக்கிய இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் C.S இசையமைத்த இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் கடந்த மாதம் 31-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த படம், தற்பொழுது நாளை மறுநாள் முதல் Netflix-இல் ஸ்ட்ரீம் ஆகிறது.

அடுத்து, ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடி நடித்த நகைச்சுவை காதல் படம் ‘ஆண் பாவம் பொல்லாதது’. கலையரசன் தங்கவேல் இயக்கிய இப்படம், திருமணத்திற்குப் பிறகு கணவன்–மனைவி இடையில் உருவாகும் கருத்து வேறுபாடுகளை நகைச்சுவையான முறையில் சொல்லுகிறது. திரையரங்குகளில் ஒரு மாதம் ஓடிய இப்படம், நாளை மறுநாள் முதல் Jio-Hotstar-ல் வெளியிடப்படுகிறது.

இவை மட்டுமல்ல — இதனுடன் 20-க்கும் மேற்பட்ட புதிய வெப் சீரிஸ்கள், ஆங்கிலம்–இந்தி புதிய படங்களும் இந்த வாரம் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷ்–க்ரித்தி ஜோடி.. ரிலீஸுக்கு முன்பே 1.5 கோடி! செம்ம வரவேற்பு

More in Cinema News

To Top