Connect with us

கரங்கள் இணைந்தாச்சு… ஆனா மனங்கள் இல்லை! அண்ணாமலை அப்செட் – அடுத்தது தான் பீக் கச்சேரி!

Politics

கரங்கள் இணைந்தாச்சு… ஆனா மனங்கள் இல்லை! அண்ணாமலை அப்செட் – அடுத்தது தான் பீக் கச்சேரி!

சென்னை: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை மீண்டும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றிருந்தாலும், முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறிய “நான் பாஜகவில் ஒரு சாதாரண தொண்டன் தான், இப்போது எதுவும் பேச முடியாது. ஆனால் நான் பேச வேண்டிய நேரம் வரும்; அப்போது எல்லாவற்றையும் வெளிப்படுத்துவேன்,” என்ற பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், கூட்டணி மற்றும் முக்கிய முடிவுகளில் தன்னை யாரும் கலந்தாலோசிக்கவில்லை என்ற அதிருப்தி அவரிடையே நீடிக்கிறது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளாக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு அண்ணாமலை முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் பெரிதாக கலந்து கொள்ளவில்லை. இதனால் அவருக்கு மீண்டும் எந்த பொறுப்பு வழங்கப்படும் என்ற ஆர்வம் பாஜக வட்டாரங்களில் எழுந்தது. அதேசமயம், முன்னாள் தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராகவும், எல். முருகன் மத்திய இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட நிலையில், அண்ணாமலைக்கும் மத்திய அல்லது மாநில அளவில் பெரிய பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆறு மாதங்கள் கடந்தும் எந்தப் பதவியும் வழங்கப்படாததால் அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தி உருவாகியுள்ளது. பாஜகவின் வாக்கு வங்கி 3 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக உயர்வதற்கு அண்ணாமலையின் பிரச்சார பங்கு முக்கியமானது என அவர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கிடையில், டெல்லியில் நடந்த பாஜக தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற விழாவிற்கும் அவர் வரவில்லை. இதனால், அவர் தலைமையிடம் கோபத்தில் உள்ளாரா என்ற கேள்வி எழுந்தது. எனினும், “எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை; இது தவறான தகவல்,” என்று அவர் விளக்கம் அளித்திருந்தார்.

பின்னர், சென்னை பாஜக மையக்குழு கூட்டத்தையும் அவர் தவிர்த்ததையடுத்து, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் நேரடியாக அண்ணாமலையின் பனையூர் இல்லத்துக்குச் சென்று, அவருடன் ஒரு மணி நேரம் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்தினார். அப்போது, பதவி நீக்கப்பட்ட பிறகு எந்த பொறுப்பும் வழங்கப்படாதது குறித்து அவர் வெளிப்படையாக கூறியதாக தகவல்கள் வெளியாகின. பி.எல். சந்தோஷ் இதை தலைமையிடம் எடுத்துச் சென்று தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்தாலும், தற்போது அண்ணாமலை மீண்டும் அமைதியாக அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறக்கூடும் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

See also  தமிழக அரசியலில் திமுக–அதிமுக இடையிலான குற்றச்சாட்டு போராட்டம் தீவிரம் பெறுகிறது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Politics

To Top