Connect with us

கார் ரேஸில் முழு கவனம் செலுத்தும் அஜித் – 2027 வரை அட்டவணை வெளியீடு!

Cinema News

கார் ரேஸில் முழு கவனம் செலுத்தும் அஜித் – 2027 வரை அட்டவணை வெளியீடு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், தனது நீண்டநாள் ஆர்வமான கார் ரேசிங் விளையாட்டில் தற்போது முழு கவனம் செலுத்தி வருவது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி, அஜித் பங்கேற்க உள்ள சர்வதேச கார் ரேஸ் போட்டிகளின் அட்டவணை 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பல்வேறு ரேசிங் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியாகியதும், ரசிகர்கள் மத்தியில் ஒரு புதிய கேள்வி எழுந்துள்ளது — அஜித் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை எப்போது தொடங்குவார்?

ஏற்கனவே இயக்குநர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் விஜய் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வந்தாலும், அந்த திட்டங்கள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்களும் செய்திகள் பரவி வருகின்றன. அதே சமயம், அஜித்தின் தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, திரைப்பட படப்பிடிப்பு அட்டவணைக்கு இடையில் கிடைக்கும் நேரங்களில் மட்டுமே அவர் கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிப்பிலும், தனது விருப்பமான ரேசிங் விளையாட்டிலும் சமநிலையை பேண முயற்சி செய்து வரும் அஜித், தனது தனித்துவமான வாழ்க்கை முறையால் ரசிகர்களிடையே தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறார். அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, அஜித்தைச் சுற்றியுள்ள புதிய தகவல்கள் மற்றும் வதந்திகள் இணையத்தில் தொடர்ந்து பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ✈️ சென்னை விமான நிலையத்தில் விஜய் கேள்வி… சிரித்தபடி தவிர்த்து சென்ற த்ரிஷா!

More in Cinema News

To Top