Connect with us

“AK-64” படக் கதை தற்போது தயாராகி வருகிறது – அஜித் குமார் அறிவிப்பு

Cinema News

“AK-64” படக் கதை தற்போது தயாராகி வருகிறது – அஜித் குமார் அறிவிப்பு

நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், அதே நேரத்தில் ஒரு தீவிர கார் பந்தய வீரராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் அதிக நேரத்தை கார் பந்தயங்களில் செலவழித்து வருகிறார். கடந்த ஆண்டு தொடங்கி பல சர்வதேச பந்தயங்களில் போட்டியிட்டு வருகிறார்.

அஜித் தனது சொந்த பந்தய அணியை “Ajith Kumar Racing” என்ற பெயரில் தொடங்கியுள்ளார். இந்த அணி துபாய், பெல்ஜியம் போன்ற பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளையும் வென்றுள்ளது. சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த போட்டியிலும் அஜித்தின் அணி மூன்றாம் இடத்தை பிடித்து ரசிகர்களுக்கு பெருமை சேர்த்தது.

இதற்கிடையில், அஜித்தின் அடுத்த படமாக இருக்கும் 64வது படம் “AK 64” குறித்து ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுகுறித்து அவர் பேட்டியளித்த போது, “AK 64 படத்திற்கான கதை தற்போது தயாராகி வருகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று கூறினார்.

மேலும், தனது அடுத்த பந்தயத்தில் இந்திய சினிமாவை உலக அளவில் பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்காக தனது பந்தய காரில் “Indian Cinema” லோகோவை பதித்து பங்கேற்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் ஒருபுறம் அவரது பந்தய வெற்றிகளை கொண்டாட, மறுபுறம் அவரது “AK 64” பட அறிவிப்பை ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரீ-ரிலீஸான குஷி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது தெரியுமா?

More in Cinema News

To Top