Connect with us

🎬 திரையரங்க வெற்றிக்கு பிறகு OTT-யில் ‘தாய் கிழவி’!

Cinema News

🎬 திரையரங்க வெற்றிக்கு பிறகு OTT-யில் ‘தாய் கிழவி’!

ஏப்ரல் 10-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ‘தாய் கிழவி’ திரைப்படம் வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம், திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2026-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும் இது சாதனை படைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்த இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டது. பாலசரவணன், சிங்கம் புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம், ரசிகர்களை கவர்ந்ததுடன், கமல் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களிடமிருந்தும் பாராட்டுகளை பெற்றுள்ளது. திரையரங்கில் கிடைத்த அதே அளவிலான வரவேற்பை ஓடிடி தளத்திலும் பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது. தற்போது இயக்குநர் சிவகுமார் முருகேசன், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹேப்பி ராஜ்: பிரஸ் ஷோவில் நல்ல வரவேற்பு… ரசிகர்கள் உற்சாகம்! 😍

More in Cinema News

To Top