Connect with us

அக்கா திருமண விழாவில் பிரபல நடிகருடன் குத்தாட்டம் போட்ட அதிதி ஷங்கர் – வைரல் வீடியோ..!!!

Cinema News

அக்கா திருமண விழாவில் பிரபல நடிகருடன் குத்தாட்டம் போட்ட அதிதி ஷங்கர் – வைரல் வீடியோ..!!!

இயக்குனர் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் ஆகியோரின் திருமண விழாவில் பிரபல நடிகருடன் அதிதி ஷங்கர் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது .

இந்திய சினிமாவில் இருக்கும் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சங்கர் .திரை வாழ்க்கையில் எப்படி இருக்கிறாரோ அதே போல் தனது சொந்த வாழ்க்கையிலும் பிரம்மாண்டமாக வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் . இந்நிலையில் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் சில பல காரணங்களால் அவர்கள் பிரிந்துவிட்டனர் .

இந்நிலையில், ஷங்கரின் துணை இயக்குனர் தருண் கார்த்தி என்பவருடன் , ஐஸ்வர்யா ஷங்கருக்கு நேற்று இரண்டாம் திருமணம் படு பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது .

இந்த திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நயன்தாரா விக்னேஷ் சிவன் , அட்லீ, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் என பல உச்ச நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் திருமண கொண்டாட்டத்தில் இயக்குனர் அட்லீ, ரன்வீர் சிங் உள்ளிட்டோருடன் நடிகை அதிதி ஷங்கர் செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

நடிகர் விஜய்யின் அப்படி போடு பாடலுக்கு அதிதி ஷங்கர், அட்லீ, ரன்வீர் சிங் மற்றும் ஷங்கரின் இளைய மகன் அர்ஜித் ஷங்கர் அனைவரும் இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அத்துமீறும் இலங்கை கடற்படை - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

More in Cinema News

To Top