Connect with us

கேப்டன் நினைவிடத்தில் நடிகை ராதா அஞ்சலி – கண்ணீருடன் நினைவுகளை பகிர்ந்து உருக்கம்..!!

Cinema News

கேப்டன் நினைவிடத்தில் நடிகை ராதா அஞ்சலி – கண்ணீருடன் நினைவுகளை பகிர்ந்து உருக்கம்..!!

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் பிரபல தென்னிந்திய நடிகை ராதா கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் கேப்டன் விஜகாந்த் .தனக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு சேவை செய்ய தேமுதிக என்ற கட்சியையும் ஆரம்பித்து சினிமா அரசியல் என இரண்டிலும் கலக்கி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக வீட்டிலும் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வந்த கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார் .

இதையடுத்து கடும் உடல்நல குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் சிகிச்சை பலன் இன்றி கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கேப்டனின் மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரது உடலுக்கும் பொதுமக்கள் திரையுலகினர் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பின் திரை பிரபலங்கள் ரசிகர்கள் மற்றும் தேமுதிகவின் தொண்டர்கள் கண்ணீர்மல்க அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .

அந்தவகையில் இன்று விஜயகாந்த்தின் நினைவிடத்தில் பிரபல தென்னிந்திய நடிகை ராதா கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதையடுத்து விஜயகாந்தின் வீட்டிற்கு சென்ற ராதா அங்கு அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராதா கூறியதாவது :

விஜயகாந்த் சார் ரொம்ப ரொம்ப நல்லவர் அவர் மாதிரி ஒரு ஆளை பார்க்கவே முடியாது . அவரது இழப்பு அவரின் குடும்பத்தினரை தாண்டி ஒட்டு மொத்த திரையுலகிற்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவருடன் நடித்த நாட்கள் என்னால் மறக்கவே முடியாது அவரின் நினைவுகள் என்னை விட்டும் எப்போதும் போகாது. அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன் என நடிகை ராதா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Box Office Success 💥 | ‘Tere Ishq Mein’ Collects ₹152 Cr Worldwide 🎬

More in Cinema News

To Top