Connect with us

அட பாவம்ங்க அவங்க – இசைநிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியாவுக்கு நேர்ந்த சோகம்..!!

Cinema News

அட பாவம்ங்க அவங்க – இசைநிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியாவுக்கு நேர்ந்த சோகம்..!!

தமிழ் சினிமாவில் இருக்கும் பன்முக திறமைகள் கொண்ட நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

கடந்த 2007ம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரையும் புகழையும் பெற்றுள்ளார் .

இதுமட்டுமல்லாமல் அந்நியன், வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், ஆதவன், மன்மதன் அம்பு, கோவா, தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் இவர் பாடிய பல பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது .

இந்நிலையில் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிசாசு 2’ படத்தில் அதீத கவனத்துடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், புதுச்சேரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டு ரசிகர்கள் முன் பல சூப்பர் பாடல்களை பாடினார்.

வேற லெவலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்படும்போது ரசிகர்கள் கூட்டத்தில் நடிகை ஆண்டிரியா வசமாக சிக்கிக் கொண்டார்.

இதையடுத்து செய்வதறியாது திணறிய அவரை போலீசார் பத்திரமாக மீட்டு அனுப்பிவைத்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "Shreya Ghoshal Viral Clicks! ரசிகர்களை கவர்ந்த அழகான Photoshoot 🔥"

More in Cinema News

To Top