Connect with us

காமெடி நடிகர் வெங்கல் ராவின் சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் வழங்கினார் நடிகர் வடிவேலு..!!

Cinema News

காமெடி நடிகர் வெங்கல் ராவின் சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் வழங்கினார் நடிகர் வடிவேலு..!!

பிரபல காமடி நடிகர் வெங்கல் ராவ் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ செலவுக்கு நிதி கேட்டு வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் தற்போது வைகைப்புயல் வடிவேலு நிதியுதவி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் வெங்கல் ராவ். தமிழில் மட்டுமே 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் வைகைப்புயல் வடிவேலுடன் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு ஒரு கை ஒரு கால் செயலிழந்த விட்டதாகவும் மருத்துவ செலவுக்கு நிதி வேண்டும் என்றும் வீடியோ மூலம் உதவி கேட்ருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நடிகர் சிம்பு 2 லட்சமும் KPY பாலா 1 லட்சமும் நிதி கொடுத்து உதவிய நிலையில் தற்போது வைகை புயல் வடிவேலுவும் 1 லட்சம் நிதி கொடுத்து உதவியுள்ளார்.

வெங்கல் ராவிடம் தொலைபேசியில் பேசிய வடிவேலு, உடல்நலம் விசாரித்து நம்பிக்கை தெரிவித்ததாகவும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆக்சன் கில்லர் ஆக அவதாரம் எடுக்கும் தனுஷ், D54 படத்தின் அப்டேட்

More in Cinema News

To Top