Connect with us

“இந்த படத்தின் தமிழ் உரிமையை வாங்கிய தயாராகவுள்ள நடிகர் சூர்யா! அப்படி என்ன படம்?!”

Cinema News

“இந்த படத்தின் தமிழ் உரிமையை வாங்கிய தயாராகவுள்ள நடிகர் சூர்யா! அப்படி என்ன படம்?!”

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் சூர்யா வாங்கி இருப்பதாகவும் இந்த படத்தில் அவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விது வினோத் சோப்ரா இயக்கத்தில் விக்ராந்த் மாஸே நடிப்பில் உருவான படம் ’12th Fail’.

இந்த படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த நிலையில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படத்தின் தமிழ் உரிமையை நடிகர் சூர்யா வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் ஒருவர் IPS அதிகாரியாக மாறியது எப்படி என்ற கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் உரிமையை சூர்யா வாங்கி இருப்பதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் ரீமேக்கில் சூர்யா நடித்தால் இன்னொரு ‘ஜெய்பீம்’ படம் போல் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் சூர்யா தற்போது கங்குவா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதனை அடுத்து வாடிவாசல், சுதா கொங்காரா படம் என பிஸியாக இருப்பதால் அவரது தயாரிப்பில் வேறு நடிகர் இந்த படத்தில் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கமெண்ட் செக்ஷன் வெடிக்குது! அஜ்மல் சர்ச்சை, பெண்களின் அதிரடி ரியாக்ஷன்

More in Cinema News

To Top