Connect with us

“Ayalaan படத்தில் ஏலியன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது இந்த பிரபல நடிகர் தானா?!”

Cinema News

“Ayalaan படத்தில் ஏலியன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது இந்த பிரபல நடிகர் தானா?!”

சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ’அயலான்’ கேரக்டர் மிகுந்த முக்கியத்துவம் பெரும் வகையில் இந்த கேரக்டருக்கு முன்னணி நடிகர் ஒருவர் குரல் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் அந்த நடிகர் யார் என்பதை படக்குழுவினர் இதுவரை ரகசியமாக வைத்திருந்த நிலையில் தற்போது அவர் பிரபல நடிகர் சித்தார்த் என்பது தெரிய வந்துள்ளது. ’அயலான்’ கேரக்டருக்கு சித்தார்த் குரல் கொடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top