Connect with us

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு திடீர் அறுவை சிகிச்சை!

Cinema News

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு திடீர் அறுவை சிகிச்சை!

பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகான். இவர் கடந்த வருடம் வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராவணனாக நடித்திருந்தார்.

இப்போது ஜூனியர் NTR, ஜான்வி கபூர் நடிக்கும் ‘தேவரா’ என்ற பான் இந்தியா படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின்போது ஏற்கெனவே அவருக்கு காயம் ஏற்பட்டிருந்த இடத்தில் மீண்டும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மும்பை கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கையின் மேல்பகுதியில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார் என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித்துக்கு கூஜா தூக்கிய பார்த்திபன், விமர்சனங்களால் தாக்கப்பட்ட விஜய்

More in Cinema News

To Top