Connect with us

“மாதவன் நடிக்கும் புதிய திரைப்படம்! இயக்குனர், ஹீரோயின் யார் தெரியுமா?!”

Cinema News

“மாதவன் நடிக்கும் புதிய திரைப்படம்! இயக்குனர், ஹீரோயின் யார் தெரியுமா?!”

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஏற்கனவே தமிழில் ’தலைவி’ மற்றும் ’சந்திரமுகி 2’ ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மாதவனுடன் மேலும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாதவன் மற்றும் கங்கனா ரனாவத் நடிக்கும் படத்தை இயக்குவது பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் என்றும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெறுவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘Mission Chapter – 1’ என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top