Connect with us

என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுகின்றன – கே.பாலசந்தர் குறித்து நடிகர் கமல்ஹாசன் உருக்கம்..

Cinema News

என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுகின்றன – கே.பாலசந்தர் குறித்து நடிகர் கமல்ஹாசன் உருக்கம்..

என் மனதில் தந்தைக்கு நிகரான இடத்தை வகிக்கும் என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுவதாக இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் குறித்து நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்பட எண்ணற்ற கலைஞர்களை உலகிற்கு தனது அற்புதமான படங்களின் மூலம் கவர வைத்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

இந்நிலையில் அவரது நினைவு நாளான இன்று அவரால் முன்னுக்கு வந்த பல கலைஞர்கள் அவரை இன்று நினைவு கூர்ந்து புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர் . அந்தவகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களும் கே.பாலசந்தர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில் :

அசாத்தியமான எண்ணிக்கையில் திரைப்படங்களை இயக்கிய திறமையாளர்; எத்தனையோ நடிப்புக் கலைஞர்களைத் திரைக்குத் தந்த திண்மையாளர்; தனக்கென்றிருந்த பாணியிலிருந்து தவறாமல் படைப்புகளைக் கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

இன்று அவரது நினைவு நாள். என் மனதில் தந்தைக்கு நிகரான இடத்தை வகிக்கும் என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுகின்றன என தனது ட்விட்டர் பதிவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top