Connect with us

“என் தங்கை வீட்டில் சொல்லிவிட்டாள்! நடிகர் காளிதாஸ் ஜெயராம் சொன்ன விஷயம்!”

Cinema News

“என் தங்கை வீட்டில் சொல்லிவிட்டாள்! நடிகர் காளிதாஸ் ஜெயராம் சொன்ன விஷயம்!”

காளிதாஸ் ஜெயராம், பிரிட்டிஷ் மாடல் அழகியான தாரணி காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், கடந்த வாரம் இருவீட்டாரின் முன்னிலையில் இவர்களின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்தில் சில முக்கியமான பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காளிதாஸ், தனது காதல் கதை குறித்து பேசி உள்ளார். அதில், நான் தாரணியை காதலிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. அந்த அளவுக்கு நான் ஒரு முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து கொண்டு இருந்தேன். எனக்குள் காதல், நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.

எங்கள் இருவருக்குள் நல்ல புரிதல் இருந்த காரணத்தால் எங்கள் இருவருக்கும் நன்றாக செட்டாகிவிட்டது. நாங்கள் இருவரும் எப்போதும் வடிவேலு சாரின் காமெடி பற்றித்தான் பேசிக்கொண்டே இருப்போம். தாரணி என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றத்தை கொண்டு வந்தாள். வீட்டில் எப்படி காதலை சொல்லுவது என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.

அப்போது, காரில் ப்ளூடூத் வழியாக பேசி அவளிம் பேசிக் கொண்டிருந்ததை என் தங்கை கேட்டுவிட்டு வீட்டில் சொல்லிவிட்டாள். நான் காதலிப்பது தெரிந்தவுடன் கோபம் எல்லாம் படவில்லை ரொம்ப சாதாரணமாக தான் இருந்தார்கள். என்னுடைய அப்பா காதலுக்கு சம்மதம் தெரிவித்தும் விட்டார். தாரணி தான் என் உயிர் எல்லாமே அவர் தான் என்று காளிதாஸ் தனது வருங்கால மனைவி குறித்து பேட்டி அளித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top