Connect with us

அந்த லிஸ்ட்ல நீங்களும் வந்துடீங்களா – காதல் மனைவியை பிரிவதாக நடிகர் ஜெயம்ரவி அறிவிப்பு..!!!

Cinema News

அந்த லிஸ்ட்ல நீங்களும் வந்துடீங்களா – காதல் மனைவியை பிரிவதாக நடிகர் ஜெயம்ரவி அறிவிப்பு..!!!

தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திரையுலகில் நாம் பார்த்த நமக்கு மிகவும் பிடித்த நட்சத்திர ஜோடிகள் பலர் விவாகரத்து அறிவிப்பை அடுத்தடுத்து வெளியிட்டு வருவது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. சமந்தா – நாக சைத்தான்யா , தனுஷ் – ஐஸ்வர்யா , ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி உள்ளிட்ட பலர் தங்களது விகாரத்தை அறிவித்து அனைவர்க்கும் ஷாக் கொடுத்தனர்.

இந்நிலையில் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் ஜெயம்ரவி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.

நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி என நடிகர் ஜெயம்ரவி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெயம் ரவியின் இந்த அறிவிப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 விஜய் – சங்கீதா விவாகரத்து? கோலிவுட்டில் அதிர்ச்சி கிளப்பும் பரபரப்பு! 💔

More in Cinema News

To Top