Connect with us

“அசோக் செல்வன் நடித்த சபா நாயகன் படத்தின் ரிலீஸ் திடீரென தள்ளிவைக்கப்பட்டது! புது ரிலீஸ் தேதி இதோ..!”

Cinema News

“அசோக் செல்வன் நடித்த சபா நாயகன் படத்தின் ரிலீஸ் திடீரென தள்ளிவைக்கப்பட்டது! புது ரிலீஸ் தேதி இதோ..!”

தமிழ் திரை உலகில் சமீபத்தில் தம்பதிகளாக இணைந்தவர்கள் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் என்பதும் இவர்களது திருமணம் திருநெல்வேலியில் வெகு சிறப்பாக நடந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் நடித்த ’கண்ணகி’ மற்றும் அசோக் செல்வன் நடித்த ’சபா நாயகன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் தனித்தனியே நடித்த திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திடீரென அசோக் செல்வன் நடித்த ’சபா நாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி போடப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தொழில் நுட்ப பணிகள் தாமதமானதன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய் உள்ளதாக கூறப்படுகிறது.

அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’சபா நாயகன்’ படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தணிக்கைக் குழு கடும் முடிவு: ‘ஜனநாயகன்’ படத்தில் 27 காட்சிகள் நீக்கம்✂️

More in Cinema News

To Top