Connect with us

பராசக்திக்கு சான்றிதழ், ஜனநாயகனுக்கு தடையா? சென்சார் மீது சந்தேகம் 😡

Cinema News

பராசக்திக்கு சான்றிதழ், ஜனநாயகனுக்கு தடையா? சென்சார் மீது சந்தேகம் 😡

பராசக்தி படத்திற்கு எந்த பெரிய தடையுமின்றி Censor Board சான்றிதழ் வழங்கப்பட்டு ரிலீஸ் ஆன நிலையில், ஜனநாயகன் படத்திற்கு மட்டும் தொடர்ச்சியாக சட்ட மற்றும் சென்சார் சிக்கல்கள் உருவாக்கப்படுவது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இரு படங்களிலும் சமூக, அரசியல் கருத்துகள் மற்றும் சமகால பிரச்சனைகள் பேசப்படும் சூழலில், ஒரே விதிமுறைகள் எல்லா படங்களுக்கும் பொருந்த வேண்டாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒருபக்கம் ஒரு படத்திற்கு எளிதாக அனுமதி வழங்கப்பட்டு, மற்றொரு பக்கம் தொடர்ந்து தடைகள் விதிக்கப்படுவது “இதன் பின்னால் ஏதேனும் அரசியல் நோக்கம் இருக்கிறதா?” என்ற சந்தேகத்தை ரசிகர்கள் வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் தீவிரமாக விவாதமாகி வரும் நிலையில், இது உண்மையில் சென்சார் சட்டங்களின் நடைமுறையா அல்லது வேறு அழுத்தங்கள் காரணமாக நடக்கிறதா என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது. இந்த சர்ச்சை, பொங்கல் ரேஸிலும் தமிழ்த் திரையுலகிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ⚠️ கடினமான காலத்தில் தமிழ் சினிமா: கர்த்திக் சுப்பராஜ் குரல்

More in Cinema News

To Top