Connect with us

“5 Years of Petta: இந்த ஆட்டம் போதுமா குழந்தை?! ரசிகர்கள் மனதில் என்றும் ரஜினியின் பேட்ட!”

Cinema News

“5 Years of Petta: இந்த ஆட்டம் போதுமா குழந்தை?! ரசிகர்கள் மனதில் என்றும் ரஜினியின் பேட்ட!”

கபாலிக்கு கிடைத்த வரவேற்பால் மீண்டும் ரஞ்சித்துடன் கைகோர்த்த ரஜினிகாந்த் காலா என்ற படத்திலும் நடித்தார். இளம் இயக்குனர்களாலும் தனது ரசிகர்களை திருப்திபடுத்த முடியும் என முழுவதுமாக நம்பிய ரஜினிகாந்த் மூன்றாவது முறையாக அவ்வாறு கார்த்திக் சுப்பராஜுடன் கைகோர்த்த படம் தான் பேட்ட.

கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா படத்தால் இம்ரஸ் ஆன ரஜினிகாந்த், பேட்ட கதையில் நடிக்க சம்மதித்ததாக கூறப்பட்டது. படத்தின் கதையை பொறுத்தவரை நண்பனை கொலை செய்த அவனது காதலி மனைவியின் அண்ணனை பழிவாங்குவது என்ற தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட அக்மார்க் பழைய கதையை.

ஆனால் இதில் நண்பனின் மகனை காப்பாற்ற எடுக்கும் வெறித்தனமான அவதாரம், வயதான பின்னரும் சிம்ரன் மீது காதல் மலர்ந்து பின்பு வெளிப்படுத்தும் குறும்புதனம் என அவரது சிவாஜி படம் வசனம் போன்றே பூ பாதை, சிங்க பாதை என இரண்டிலும் வெரைட்டி காட்டியிருப்பார்.

ரஜினிக்கு எதிராக வெயிட்டான வில்லனாக ஆரம்பத்தில் சோப்லாங்கியாக, பின்னர் அலட்டல் இல்லாத வில்லனாகவும் மிரட்டரலான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிப்பு அசுரன் நாவஸுதின் சித்திக் தோன்றியிருப்பார். மற்றொரு வில்லனாக அலட்டிக்கொள்ளாத கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருப்பார்.

சசிக்குமார், இயக்குநர் மகேந்திரன், குருசோசமசுந்தரம், ஆடுகளம் நரேன், பாபி சிம்ஹா, சனத், மேக்னா ஆகாஷ் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். 90ஸ் கடைசி காலகட்டத்தில் டாப் ஹீரோயினாக வலம் வந்த சிம்ரன், 2K ஆரம்ப காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த த்ரிஷா ஆகியோர் ரஜினிக்கு முதல் முறையாக ஜோடியாக நடித்திருப்பார்கள். மலைாளம், இந்தி சினிமாக்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், சசிக்குமார் காதலியாக நடித்திருப்பார்.

இதுவரை ரஜினிகாந்த் படத்தில் இல்லாத புதுவித கலர் டோனிலும், லெக்கேஷ்ன்களிலும் ஒளிப்பதிவு செய்திருக்கும் திரு, கண்களுக்கு விருந்து படைத்திருப்பார். 2008இல் வெளியான குசேலன் படத்துக்கு பின்னர் 10 ஆண்டுகள் கழித்து பேட்ட படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்திருப்பார்.

அப்போது சீகரெட் உடம்புக்கு நல்லது இல்லை. என அனுபவத்துல சொல்றேன் என அட்வைஸ் செய்திருப்பார். 2011இல் தீவிர உடல்நல பாதிப்பால் பாதிக்கப்பட்ட பின்னர் மீண்டு வந்தார் ரஜினிகாந்த். அதை நினைவுபடுத்தும் விதமாக அந்த காட்சி அமைந்திருக்கும். இந்த படத்தை ஓபன் கிளைமாக்ஸாக கார்த்திக் சுப்பராஜ் முடித்திருப்பார்.

படம் முடிவதற்கு முந்தைய பிரேமில் ரஜினி இந்த ஆட்டம் போதுமா கண்ணா என ரசிகர்களை கேட்கும் விதமாக அமைந்திருக்கும். அந்த வகையில் ரஜினி ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கம், எதிர்பார்ப்பு பூர்த்தி செய்த பக்கா ஆக்‌ஷன் த்ரில்லர் செண்டிமென்ட கொண்ட மசாலா திரைப்படமாக அமைந்திருந்த பேட்ட வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது.

See also  பல மொழி படங்களில் பட்டயகிளப்பும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா..?

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top