Connect with us

12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவச்செல்வங்களே விரைவில் சந்திப்போம் – விஜய்யின் அறிவிப்பால் உற்சாகத்தில் மாணவர்கள்..!!

Cinema News

12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவச்செல்வங்களே விரைவில் சந்திப்போம் – விஜய்யின் அறிவிப்பால் உற்சாகத்தில் மாணவர்கள்..!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் விரைவில் நாம் சந்திப்போம் என நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது . இந்நிலையில் தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.

வழக்கம் போல் இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் அரசியல் தலைவர்களும் , திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று,வெற்றி பெற வாழ்த்துகள்.

அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.விரைவில் நாம் சந்திப்போம்! என விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியினை தொடங்கும் முன்னே கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக இந்த முறை விஜய் அவர்களை நேரில் காண போகிறோம் என்ற ஆசையில் 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் செம குஷியில் உள்ளனர்.

More in Cinema News

To Top