Connect with us

கங்குவா படத்தின் 12 நிமிட காட்சிகள் நீக்கம்? – படக்குழு அறிவிப்பு..!!

Cinema News

கங்குவா படத்தின் 12 நிமிட காட்சிகள் நீக்கம்? – படக்குழு அறிவிப்பு..!!

திரையரங்குகளில் திறம்பட ஓடிக்கொண்டிருக்கும் கங்குவா திரைப்படத்தின் 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

சூர்யா மற்றும் சிறுத்தை சிவா காம்போவில் தரமாக தயாரான திரைப்படமே கங்குவா . UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்த இப்படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

இப்படம் கடந்த 14 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான நிலையில் வெளியான நாள் பல கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இப்படத்தில் சில காட்சிகளில் இரைச்சல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படத்தில் இருந்து 12 நிமிடங்களுக்குள்ளான காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒலி வடிவமைப்பில் சில குறைகள் இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், நாளையில் இருந்து காட்சிகள் நீக்கப்பட்ட படம் திரையிடப்படும் எனவும் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top