Connect with us

திரையரங்குகளுக்கு வெளியே ரிவியூ எடுப்பதை எங்களால் தடுக்க முடியாது – திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பகீர் பேட்டி

Cinema News

திரையரங்குகளுக்கு வெளியே ரிவியூ எடுப்பதை எங்களால் தடுக்க முடியாது – திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பகீர் பேட்டி

திரையரங்குகளுக்கு வெளியே ரிவியூ எடுப்பதை திரையரங்க உரிமையாளர்கள் தடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்த நிலையில் திரையரங்குகளுக்கு வெளியே ரிவியூ எடுப்பதை எங்களால் தடுக்க முடியாது என திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

FDFS ரிவியூ குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது :

FDFS ரிவியூ எடுப்பதை தடை செய்தால் யூடியூபர்கள் பாதிக்கப்படுவார்கள் என நினைத்தால், அவர்களால் ஒட்டுமொத்த திரைத்துறையும் பாதிக்கப்படும்.

தனது விமர்சனத்தில், தனிமனித தாக்குதல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு

திரையரங்குகளுக்கு வெளியே ரிவியூ எடுப்பதை எங்களால் தடுக்க முடியாது என்றாலும், இதை சட்ட ரீதியாக அணுக உள்ளோம் என திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு மோசமான விமர்சங்கள் எழுந்து வரும் நிலையில் தற்போது கங்கா படத்திற்கும் FDFS ரிவியூ கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Thalaivar 173 அப்டேட் – ஏப்ரல் ஷூட்டிங் குறித்து சிபி சக்ரவர்த்தி கூறியது

More in Cinema News

To Top