Bigg Boss 9: ஒவ்வொரு வருடமும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் பார்க்கப்பட்டு பெரிய வரவேற்பு நிகழ்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது. இதில் சில ஏற்றம் இறக்கம் இருந்தாலும் 100 நாள் வேலைத்திட்டம் என்று சொல்வதற்கு ஏற்ப பார்ப்பவர்களை 100 நாள் கட்டிப்போடும் அளவிற்கு விறுவிறுப்பாக இருக்கும். பொதுவாக பக்கத்து வீட்டில் சண்டை நடந்தாலே நம் ஆர்வமாக பார்ப்பது வழக்கம்.
vj parvathi
அதுபோல தினமும் ஒரு வீட்டில் நடக்கும் சண்டையும் சச்சரவுகளும் போட்டியும் பொறாமையும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும் ஒரே நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த வகையில் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பமான பிக் பாஸ் சீசன் 9 மற்ற சீசன்களை விட பெரிய அளவில் எதிர்பார்த்தபடி இல்லை என்றாலும் ஏதோ பொழுதுபோக்குக்காக பார்க்கலாம் என்று சொல்லும் வகையில் தற்போது போய்க்கொண்டிருக்கிறது.
இதில் 10ஆண் போட்டியாளர்களும் 9 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை பங்கு பெற்று இருக்கிறார்கள். ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய அஞ்சாவது நாளிலேயே நந்தினி என்னும் போட்டியாளர், என்னால் இந்த வீட்டில் நடிக்க முடியவில்லை, மற்றவர்கள் போலியாக நடிப்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று வெளியேறிவிட்டார். இதனை அடுத்து நாமினேட் ஆனவர்களில் கம்மியான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி என்பவரும் எலிமினேட் ஆனார்.
அடுத்ததாக இரண்டாவது வாரத்திற்காக இன்று நாமினேட் செய்யப்பட்டவர்கள் யார் என்றால் VJ பார்வதி, கம்ருதீன், சபரி, கலையரசன், துஷார், திவாகர். ஆனால் இதில் அதிகமாக நாமினேட் ஆனவர் விஜே பார்வதி தான். இப்படித்தான் பிக் பாஸ் சீசன் நான்காவது நிகழ்ச்சியில் விஜே அர்ச்சனா கலந்துகொண்டு 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்து வெளியேறினார். ஆனால் இவருக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் வீட்டிற்குள்ளேயும் வெளியேயும் வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி ரொம்பவே அவஸ்தப்பட்டார்.
தற்போது இதே நிலைமை தான் VJ பார்வதியும் வீட்டிற்குள்ளேயும் வெளியேயும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து சீரியல் மூலம் பிரபலமாகி வீட்டிற்குள் போன சபரி மற்றும் கமருதினும் நல்லா இருந்த பேரை கெடுக்கும் விதமாக கொஞ்சம் கொஞ்சமாக டேமேஜ் ஆகி வருகிறார்கள். இந்த முறை பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பற்றி எதுவும் சொல்ல முடியாத அளவிற்கு யாரும் பெருசாக மக்களை இன்னும் கவரவில்லை.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….