Connect with us

லோன் கட்டவே சிரமப்பட்டேன்.. ஜோதிடர்களை பார்த்ததால் மாறியது வாழ்க்கை.. விஜே மணிமேகலை ஓபன் டாக்

VJ_Manimegalai

Cinema News

லோன் கட்டவே சிரமப்பட்டேன்.. ஜோதிடர்களை பார்த்ததால் மாறியது வாழ்க்கை.. விஜே மணிமேகலை ஓபன் டாக்

விஜய் டிவி பிரபலம் விஜே மணிமேகலை தனது வீட்டு லோனை கட்டுவதற்கே கஷ்டப்படுவதாக ஒரு வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்த காலத்திலேயே பார்ட் டைமாக ஆங்கரிங் செய்வதன் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகமான மணிமேகலை தனது பேச்சுத் திறமையின் மூலம், விரைவில் சின்னத்திரை ரசிகர்களின் மனதைக் கவர்ந்த தொகுப்பாளினி ஆனார். அதைத் தொடர்ந்து விரைவிலேயே தான் காதலித்து வந்த ஹுசைன் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் கோமாளியாக வந்து கலக்கிய மணிமேகலை, கடைசி சீசனில் அதே தொடரில் தொகுப்பாளினியாகவும் இடம்பெற்றார். விஜய் டிவி தவிர சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் மணிமேகலை, அதில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

பெற்றோரை மீறி திருமணம் செய்ததால், குடும்பத்தை பிரிந்த மணிமேகலை தற்போது மீண்டும் பெற்றோருடன் ராசியாகி விட்டார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது யூடியூப் சேனலில் அம்மாவுடன் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனக்கு முன்பைப் போல் நிகழ்ச்சிகள் அதிகமாக வருவதில்லை என்றும், இதனால் வருமான வாய்ப்புகள் குறைந்து வீட்டு கடனை கட்டக்கூட சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார். எனினும், அம்மாவின் ஆலோசனைப்படி சில ஜோதிடர்களை பார்த்து ஆலோசனை பெற்ற பிறகு தற்போது நிலைமை சற்று மேம்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 சதவீத விசாரணை முடிந்துவிட்டது - காவல் ஆணையர் அருண்

More in Cinema News

To Top