Connect with us

“தலைவர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ பட ஷூட்டிங் ஸ்பாட் Pics Viral!”

Cinema News

“தலைவர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ பட ஷூட்டிங் ஸ்பாட் Pics Viral!”

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே நடைபெற்று வருகிறது. மேலும் ‘வேட்டையன்’ படப்பிடிப்பில் ரஜினியுடன் பகத் பாசில் இணைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தில் ரஜினி மற்றும் பகத் பாசில் ஒரு கரும்பலகை அருகே நின்று கொண்டிருப்பது போன்றும் அந்த கரும்பலகையில் அன்னை தெரசாவின் வாசகம் எழுதப்பட்டிருப்பது போன்று தெரிகிறது.

’வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை’ என்ற அன்னை தெரசாவின் வாசகத்துடன் ரஜினி மற்றும் பகத் பாசில் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரஜினி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகின்றனர்.

காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்து வரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து வரும் ’வேட்டையன்’ திரைப்படம் ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top