Connect with us

அபிநயுடன் 4 நாட்கள் இருந்த அனுபவம்: மனம் நொந்த விஜயலட்சுமி

Cinema News

அபிநயுடன் 4 நாட்கள் இருந்த அனுபவம்: மனம் நொந்த விஜயலட்சுமி

சில தினங்கள் முன்பு ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அபிநய் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கல்லீரல் நோயால் அவதிப்பட்ட அவர், சிகிச்சைக்குத் தேவையான பணம் இல்லாமல் தவித்ததாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார். பின்னர் KPY பாலா உள்ளிட்ட சில நடிகர்கள் உதவி செய்தனர்.

எனினும், சமீபத்தில் அவர் தூக்கத்திலேயே மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகள் உறவினர்கள் இன்றி, சினிமா நண்பர்களின் உதவியுடன் நடைபெற்றது.இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி ஒரு மனம் நெகிழ வைக்கும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். பல வருடங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக, அவர் அபிநயுடன் ஒரே சேவை அபார்ட்மெண்டில் நான்கு நாட்கள் தங்கியிருந்ததாக கூறியுள்ளார்.

அப்போது, “அபிநய் மிகவும் ஜென்டில்மேன் போல் நடந்துகொண்டார். இரவில் தனியாக அமர்ந்து குடிப்பதை பார்த்தேன். காரணம் கேட்டபோது, அவர் தனது மன வலிகளை இரண்டு மணி நேரம் கொட்டி தீர்த்தார். அந்த வேளையில் அவர் எவ்வளவு வேதனைப்பட்டார் என புரிந்தது,” என விஜயலட்சுமி நினைவு கூறினார்.

“இப்போது அவர் இல்லாத செய்தி எனக்கு மிகுந்த துயரத்தை அளித்தது. ஆனால், அவர் அனுபவித்த வலிகள் முடிந்து, அமைதியை கண்டிருப்பார் என்று நம்புகிறேன்,” என அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🚫 “Bro Code” என்ற பெயருக்கு தடை – ரவி மோகனுக்கு சட்ட சவால்!

More in Cinema News

To Top