Connect with us

அடையாறில் விஜய் சேதுபதியின் இலவச துணிக்கடை.. ‘துளி’ அமைப்பின் முயற்சி

Cinema News

அடையாறில் விஜய் சேதுபதியின் இலவச துணிக்கடை.. ‘துளி’ அமைப்பின் முயற்சி

நடிகர் விஜய் சேதுபதி, தற்போது திரைப்படங்களிலும் பிக் பாஸ் தொகுப்பாளராகவும் பிஸியாக இருந்தாலும், அமைதியாகச் செய்து வரும் ஒரு மனிதநேயச் செயல் குறித்து பலருக்கும் தெரியாது. கடந்த ஆறு ஆண்டுகளாக, ‘துளி’ என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து, ஏழை மற்றும் வசதி குறைந்த மக்களுக்கு இலவசமாகவும் மிகக் குறைந்த விலையிலும் ஆடைகள் வழங்கும் சேவையை அவர் செய்து வருகிறார்.

சென்னை அடையாறில் உள்ள இந்த ‘இலவச துணிக்கடை’ பற்றி அங்கு பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் பகிர்ந்த தகவல்கள் இதோ:

முழுமையாக இலவசம் என்று நினைத்து மக்கள் மனதில் தயக்கம் உருவாகக் கூடாது என்பதற்காக, சில ஆடைகள் மிகவும் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. இதில் எந்த லாப நோக்கமும் இல்லை.

வாங்கிச் செல்லும் மக்களுக்கு மன வருத்தம் அல்லது வெட்கம் வராத வகையில் கவனமாக சேவை செய்யப்படுகிறது.

இந்தக் கடையில் வாங்கிய ஆடைகளை அணிந்து குழந்தைகள் கல்லூரிக்கு செல்வதாக பல பெற்றோர்கள் சொல்லும் போது, அது நம்மை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது என்று ஊழியர் பகிர்ந்தார். “இந்த சேவைக்காக விஜய் சேதுபதி சார் deserves a big thank you,” என்றும் அவர் கூறினார்.

அமைதியாகச் செய்யப்படும் இந்த நற்செயல் குறித்து அறிந்த பலரும், சமூக பொறுப்பை பின்பற்றும் விஜய் சேதுபதியைப் பாராட்டி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Pushpa 2 Goes to Japan! 🇯🇵🔥 அலூ அர்ஜுன் Global Level Punch!”

More in Cinema News

To Top